லொயோலா கல்லூரியில் குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா
- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கேற்பு
- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கேற்பு
ஐந்தாவது ஆண்டு குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா லொயோலா கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறை மற்றும் பரிவு மாத இதழ் இணைந்து நடத்திய மாநில அளவிலான குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். உடன் நடிகர் ஜான் விஜய் மற்றும் 'தாடி' பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் போது கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் திரைத்துறையில் இயக்குநர் ஆக விரும்பும் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்கள், தங்கள் ஊக்கத்தைக் கைவிடாமல் வெற்றி பெறுவதற்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.
- அறிக்கை: யோவான் தீபக் (15-PMA-02)
No comments:
Post a Comment